பதினைந்து வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ படத்தில் மீடியா ரிப்போர்ட்டரான அர்ஜுன், சேனலின் லைவ் நிகழ்ச்சியில் முதல்வர் ரகுவரனிடம் ஏடாகூடமாக கேள்விகள் கேட்டு அவருக்கு சிக்கலை உண்டு பண்ணிவிடுவார்.. அதன்பின் அடுத்த நாளே அவரது வீட்டிற்கு தண்ணீர் சப்ளை, கரண்ட் எல்லாமே நிறுத்தப்படும்..
தற்போது இதேபோன்றதொரு நிலைமைதான் கமலுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. ‘நான் காட்டிய வரிப்பணம் எல்லாம் எங்கே போச்சு” என அவர் கேட்ட ஒரு கேள்விதான் காரணம் என்கிறார்கள். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றும் அவர் மறுப்பு சொல்லிவிட்டார். ஆனாலும் அவரது ஆழ்வார் பேட்டை வீடு முன்பாக கழிவு நீர் இன்னும் தேங்கி இருக்கிறதாம்.
அவரது வீடு மற்றும் அருகில் உள்ள நான்கு வீடுகளுக்கு மட்டும் கரண்ட் சப்ளை இன்னும் வரவில்லையாம். அதேசாலையில் உள்ள மற்ற இடங்களில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு சுத்தமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சாலையில் உள்ள மற்ற வீடுகளுக்கு எல்லாம் மின்சாரம் வந்துவிட்ட நிலையில் கமலின் வீட்டுக்கு மட்டும் இப்படி நடக்கிறதென்றால் இதற்கு என்ன அர்த்தம் என்கிறார்கள் அந்த பகுதிவாசிகள்..