அரசியல் நெருக்கடியை தவிர்க்க ரூட்டை மாற்றிய ரஜினி..!

வெள்ள நிவாரண நிதியாக வெறும் பத்தும் லட்சம் மட்டும் கொடுத்திருக்கிறாரே என ரஜினி மீது சிலர் கோபப்பட, இன்னும் சிலரோ இல்லையில்லை, அவர் அதற்கடுத்ததாக பத்துகோடி ரூபாயை நிவாரண நிதியாக அம்மாவிடம் வழங்கியுள்ளார் என இன்னொரு செய்தியை பதிலுக்கு கிளப்பி விட்டார்கள்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வமான செய்தி எதுவும் இதுவரை இரண்டு தரப்பில் இருந்தும் வெளியாகவில்லை. ஆனால் உதவி செய்யும் வேலையை ரஜினி ஆரம்பித்துவிட்டது உண்மைதான் என்றும், தேவையில்லாமல் அரசியல் சிக்கலில் மாட்டிக்கொள்ளவேண்டாம் என்பதால் வேறு ரூட்டை பிடித்து தனது உதவிகளை மக்களுக்கு அனுப்பிக்கொண்டுள்ளார் எனவும் செய்திகள் கசிந்துள்ளன.

அதாவது இந்த மழை வெள்ளத்தின் காரணமாக அனைவருக்குமே தமிழக அரசு மேல் கோபம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரஜினி நேரடியாக உதவிசெய்ய களத்தில் இறங்கினால் அதையும் அரசியலாக்கி, கமல் வீட்டைப்போல, அவர் வீட்டிற்கும் கரண்ட்டை கட் பண்ணிவிடுவார்கள் என்கிற அச்சமும் ஏற்பட்டது..

அதனால் தான் தனது மகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் மூலமாக கிட்டத்தட்ட பத்துகோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை சத்தம் இல்லாமல் மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தான் இந்த உதவிகளை ஒருங்கிணைத்து வெளியே அனுப்புகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இங்கு எல்லாமே அரசியலாகத்தானே பார்க்கப்படுகிறது. அப்புறம் எப்படி வெளிப்படையாக எதையும் செய்யமுடியும் என்கிற ரஜினி தரப்பு கேள்வி நியாயமானது தானே..?