பீப் சாங் என்பது ஒரு விரும்பத்தகாத நிகழ்வாக அமைந்து விட்டாலும் சில நல்ல நிகழ்வுகளையும் அரங்கேற்ற தவறவில்லை. குறிப்பாக பல்லை கடித்துக்கொண்டு பஞ்ச் டயலாக் பேசும் லிட்டில் சூப்பர்ஸ்டாரை வாயை திறக்க விடாமல் பதுங்கு குழிக்குள் பதுங்க செய்து ரசிகர்களை அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
அடுத்ததாக தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த, இந்த விஷயத்தில் தெரிந்தோ, தெரியாமலோ மாட்டிக்கொண்ட அனிருத்தின் கோணங்கி சேட்டைகளை குறைக்கச்செய்து அவரை அமெரிக்காவிலேயே நிறுத்தி வைத்துவிட்டது..
விளைவு, தான் நடிக்கும் கொடி’ படத்துக்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்து அணிருத்துகு கல்தா கொடுத்துவிட்டார் தனுஷ். அனிருத்துடன் சேரவேண்டாம் என குடும்பத்தில் இருந்து தனுஷுக்கு கொடுக்கப்பட்ட பிரஷரும் ஒரு காரணம் என்கிறார்கள் இன்னும் சிலர்.