விஜய், அஜித் ரசிகர்களை மோதவிட்ட விஜய் டிவி..!


எப்போதும் அஜித், விஜய் ரசிகர்களுக்குள் கருத்து மோதல் நடப்பது சாதாரணம் தான். அது பெரும்பாலும் பேஸ்புக், ட்விட்டர் என சோஷியல் மீடியா அளவிலேயே இருந்து வந்தது.. சில இடங்களில் மட்டும் போஸ்டர் யுத்தம் நடக்கும். இதனாலேயே இவர்கள் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீசாகும் நிகழ்வுகள் நடக்காமல் இரண்டு பேரு பார்த்துக்கொள்கின்றனர்..

நிலைமை இப்படி இருக்க, கருத்து மோதலுக்கு சூப்பரான கதைக்களமான விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் விஜய், அஜித் ரசிகர்களை நேருக்கு நேர் மோதவிட்டால் எப்படி இருக்கும்..? அதைத்தான் விஜய் டிவி திறம்பட செய்து முடித்திருக்கிறது..

தங்களது நீயா நானா புரோகிராமின் டி.ஆர்.பி. எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்வதற்காக ரசிகர்களை சுண்டி இழுக்கும் சப்ஜெக்ட்டுகளாக தேர்வு செய்வார்கள்.. இடையில் இந்த நிகழ்வில் சற்று தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து, திடீர் யோசனையாக விஜய், அஜித் ரசிகர்களை மோதவிட்டிருக்கிரார்கள்..

நிகழ்ச்சியின்போது உண்மையிலேயே இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு கை ஓங்கும் அளவுக்கு போனதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பவுன்சர்களை வைத்து சமாளித்ததாகவும் சொல்லப்படுகிறது.. அவர்களுக்கு என்ன… எப்படியோ டி.ஆர்.பி.ரேட்டிங் ஏறினால் சரி..