பெங்களூர் நாட்கள் படம் ராணாவின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா..?


இரண்டு தினங்களுக்கு முன் ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய ஆர்யா, படத்தின் இன்னொரு நாயகனான ராணாவின் நடிப்பு பற்றி குறிப்பிடும்போது, “நீங்க எல்லாம் அவரை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சா எப்படி குடும்பம் நடத்துவாரோ, அதேபோல இயல்பாக படத்திலும் நடித்துள்ளார்.. கிட்டத்தட்ட அவரது உண்மை கதை போலத்தான் இதுவும்” என்றார்..

இதுநாள் வரைக்கும் மீடியாக்களில் ஓடிக்கொண்டிருப்பது ராணா-த்ரிஷா காதல் கதைதான்.. அதைத்தான் ஆர்யா குறிப்பிடுகிறாரா..? சரி அதுதான் போகட்டும் என ராணாவிடமே த்ரிஷா பற்றி கேள்வி கேட்டால், அவரோ, “அதற்கு ஆர்யாவே பதில் சொல்வார்” என கைகாட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். ஆர்யாவை கேட்டால் த்ரிஷா என் தங்கச்சி என்கிறார்.. என்னதான்யா நடக்குது இங்கே என நாம் தான் தலையை பிய்த்துக்கொள்ளவேண்டும் போல தெரிகிறது.