பாபி சிம்ஹாவை அவாய்ட் பண்ணிய விஜய்சேதுபதி..!


நடிகர்கள் வளர்வதற்கு முன் செல்போன் அவர்களது கைகளில் எப்போதும் இருக்கும்.. ஒரு காலை மிஸ் பண்ணிவிட்டால் கூட, ஒரு பட வாய்ப்பு பறிபோய்விடுமோ என்கிற அச்சம் இருந்துகொண்டே இருக்கும்.. ஆனால் வளர்ந்தபின் செல்போனை எடுத்து பேசுவதற்கென்றே சம்பளத்திற்கு ஆழ்த்களை நியமிக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர்..

எல்லா ஹீரோக்களும் அப்படி அல்ல.. ஒருசிலர் தான் அப்படி. நடிகர் விஜய்சேதுபதியும் அந்த லிஸ்டில் தான் இடம்பிடித்துள்ளார். இதை நாம் சொல்லவில்லை.. அவரது நண்பரான நடிகர் பாபி சிம்ஹாவே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மனம் திறந்து, வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார்.. யாராவது ஒருவருக்கு அறிவுரை சொல்வது என்றால் விஜய் சேதுபதி தனது போனை எடுத்து முறையாக மற்றவர்களுக்கு பதில் சொல்லவேண்டும் என்று அவருக்குத்தான் கோரிக்கை வைப்பேன் என்று கூறியுள்ளாராம் பாபி சிம்ஹா.