சேதுபதி vs மிருதன் ; ஆபரேசன் பெய்லியர்.. பேஷண்ட் பிழைச்சுட்டார்..!


கடந்த வாரம் இரண்டு பெரிய படங்கள் வெளியாகின.. அருண்குமார் இயக்கியுள்ள சேதுபதியில் க்ரைம் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்றால், சக்தி சௌந்தர்ராஜனின் மிருதனில் ட்ராபிக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி.. யாருக்கு பவர் அதிகம், அல்லது இரண்டுபேருக்குமே சம அளவு பவரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்..

இரண்டு போலீஸ்களுமே நம்பவைத்து சம அளவில் ஏமாற்றிவிட்டனர். ஆனால் தியேட்டர்களில் இருந்து வரும் ரிப்போர்ட் வேற மாதிரி இருக்கிறதாம். இரண்டு படங்களும் வரவேற்புடன் தான் ஓடிக்கொண்டு இருக்கின்றனவாம்.. இரண்டு பக்கத்து வசூல் நிலவரமும் திருப்தியாகத்தான் இருக்கிறதாம். ஆக ஆபரேசன் பெய்லியர்.. ஆனா பேஷண்ட் பிழைச்சுட்டார்ங்கிற மாதிரி புதுமையாவுல இருக்கு.