வரும் ஏப்-14 அன்று விஜய் நடித்துள்ள தெறி’ படம் மிக பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. எப்போதுமே விஜய் படங்கள் ரிலீசுக்கு முன் ஏதாவது சிக்கலில் சிக்கி, நொந்து நூலாகி அதன்பின் பஞ்சாயத்து முடிந்து ஒரு வழியாக வெளியாவது தான் வழக்கமாக இருக்கிறது. துப்பாக்கி படத்தில் இருந்து இதுதான் நிலை..
இப்போது ‘தெறி’ படம் நன்றாக வந்திருப்பதால் ரிலீஸ் செய்யும் குஷியில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் தரப்பில் குடைச்சல் கொடுத்து வருகிறார்களாம். இதற்கு காரணம் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு தானாம்.
ஆம். தற்போது தமிழக அரசு டிக்கெட் விலையை அதிகமாக விற்பனை செய்தால் புகார் அளிக்குமாறு ஒரு எண்ணை அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பைக் காரணம் காட்டி திரையரங்க உரிமையாளர்கள் தாணுவிடம் படத்தின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் தாணு படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் அதற்கு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் கலைப்புலி தாணுவுக்கு இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. ஈசியாக சரிசெய்து விடுவார் என்கிறார்கள் மற்ற விநியோகஸ்தர்கள்.