பிரகாஷ்ராஜுக்கு எட்டாக்கனியாகவே போய்விட்ட ரஜினி படம்..!


கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்துவிட்ட பிரகாஷ்ராஜ், ரஜினியுடன் மட்டும் நடிப்பதற்கு ஏனோ தயங்குகிறார் என்பது மட்டும் நன்றாக புரிகிறது. இல்லையென்றால் படையப்பா படத்தில் ரஜினியுடன் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் போலீஸ் அதிகாரியாக சப்பையான ரோலில் நடித்த பிரகாஷ் ராஜ், அடுத்ததடுத்த ரஜினி படங்களில் நடிக்க வாய்ப்பிருந்தும் வாய்ப்பு தேடி வந்தும் நடிக்காதது எதனால் என்பது அவருக்கே வெளிச்சம்..

ஏன் தற்போது ரஜினி நடித்து வெளியாக இருக்கும் ‘கபாலி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு வரத்தான் செய்தது.. ஆனால் சம்பளமாக கெட்டதோ பல லட்சங்கள்.. ஆனால் அந்த ரேட் தனைகளுக்கு கட்டுபடியாகாது என நினைத்த தயாரிப்பாளர் தாணுவும், இயக்குனர் ரஞ்சித்தும் வெறும் பத்து லட்ச ரூபாய்க்கு நடிகர் ஜான் விஜய்யை ஒப்பந்தம் செய்து படத்தை முடித்து விட்டனர்… எப்படி ரகுவரன் கமலுடனோ அல்லது கமலுக்கு வில்லனாகவோ நடிக்கமாலே போய்விட்டாரோ, அதேபோல பிரகாஷ் ராஜும் ஒரு புதிய ரெக்கார்டுக்கு தயாராகிறாரோ என்னவோ..?