“போட்டியாக யார் படம் ரிலீசானாலும் கவலை(ப்பட) வேண்டாம்” ; ஜீவா சவால்..!


ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பெட்ரோமாஸ் லைட் வாடகைக்கு போகுது என்பது போல நீண்ட நாட்கள் கழித்து ஜீவாவின் படமான ‘கவலை வேண்டாம்’ அக்-7ல் ரிலீஸாக இருக்கிறது. தன்னை வைத்து ‘யான்’ படத்தை தயாரித்து நட்டமடைந்த எல்ரெட் குமாருக்காக இந்தப்படத்தில் சம்பளம் வாங்காமலோ அல்லது குறைந்த சம்பளத்திலோ நடித்துள்ளாராம் ஜீவா..

இந்தபடம் தனக்கு கைகொடுக்கும் என நம்பும் ஜீவாவுக்கு சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படமும் அதே அக்-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது.. நம் படத்தை வேண்டுமானால் கொஞ்சம் தள்ளி வைக்கலாமா என கேட்டவர்களிடம், போட்டியாக யார் படம் ரிலீசானாலும் கவலை வேண்டாம் என கூறிவிட்டாராம் ஜீவா.