மீண்டும் வேலையை காட்டிய நயன்தாரா.. டென்ஷனான ஹீரோ..!


நயன்தாராவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களோ, அல்லது இயக்குனர்கள் சிலரோ சுயநினைவுடன் தான் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் தான் இப்போது ஏற்படுகிறது. அவரை வைத்து படம் எடுத்தால் பிசினஸ் பண்ணலாம், லாபம் பார்க்கலாம் என்றுதானே அவரிடம் பணத்தை கொட்டுகிறார்கள். நயன்தாரா போடும் கண்டிஷன்களுக்கு எல்லாம் ஒப்புக்கொள்கிறார்கள்.

அப்போதெல்லாம் விட்டுவிட்டு, படம் முடிந்தபின் அவர் ஆடியோ ரிலீசுக்கு வரமாட்டேன் என்கிறார், தொலைக்காட்சி புரமோஷன்களுக்கு வரமாட்டேன் என்று குதித்தால் என்ன லாபம்.. இல்லை நயன்தாரா மீது ரெட் கார்டு போடுவதால் மட்டும் என்ன லாபம்..?

நயன்தாரா தான் நடிக்கவேண்டும் என அவரை ஒப்பந்தம் செய்யும்போதே, யாராவது மேற்கூறிய விசயங்களை சொல்லி அவரிடம் ஒப்புதல் வாங்குகிறார்களா என்றால் இல்லை.. கேட்டாலும் கையெழுத்து போடமாட்டார். சம்மதிக்கவும் மாட்டார். இப்போதைக்கு ஒப்பந்தம் செய்வோம், படப்பிடிப்பு முடிந்ததும் தாஜா பண்ணி அவரை வரவழைப்போம் என்றே தான் பலரும் நினைக்கிறார்கள்.

அவர்தான் வரமாட்டேன் என்கிறாரே.. அப்புறம் என்னத்துக்கு அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க தேடுகிறீர்கள் என்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில்.. பல வருடங்களாக நடக்கும் இந்த கதை இப்போது ரிப்பீட் ஆகியிருப்பது தெலுங்கில் வெங்கடேஷுடன் நயன்தாரா நடித்துள்ள பாபு பங்காரம் படத்திற்குத்தான். வழக்கம்போல இசைவெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா வரவில்லை. டென்ஷனான நடிகரும், தயாரிப்பாளரும் அவரவர் சங்கத்தில் புகார் கொடுத்து நயன்தாராவுக்கு தெலுங்கில் ரெட் கார்டு போடப்போகிறார்களாம்.. ஏற்கனவே ஒருமுறை போட்டது தானே..? பெருசா ஒண்ணும் பலன் இல்லையே..?