விஜய் படங்களின் டீசர், ட்ரெய்லர் போஸ்டர் வெளியானால் சோஷியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பதும், அதேபோல அஜித்தின் படங்களை விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும் காலம் காலமாக நடைபெற்று வருவதுதான். அந்தவகையில் விஜய்யின் 60வது பட டைட்டில் அறிவிக்கப்படுவதற்காக விஜய் ரசிகர்களைவிட, அஜீத் ரசிகர்கள் பௌலரின் பந்தை சிக்சருக்கு தட்ட தயாராக நிற்கும் பேட்ஸ்மேன் போல ஆவலுடன் காத்திருந்தார்கள்..
அந்த நாளும் இதோ வந்தது.. விஜய்யின் படத்துக்கு ‘பைரவா’ என்கிற கம்பீரமான டைட்டிலும் வைக்கப்பட்டு விட்டது. குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களான அஜித் ரசிகர்கள் அந்நியன் பிரகாஷ்ராஜ் – விவேக் பாணியில் வார்த்தைகளை குழப்பியடித்து புது விஷயம் ஒன்றை கண்டுபிடித்துவிட்டார்கள்..
அதுதான் ‘பைரவா’ என்பதை ஆங்கிலத்தில் ‘Buy Rava’ என மாற்றி, உப்புமாவுக்கு ரவை வாங்கி வருகிறாரா விஜய் என்பதாக கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. இனி எப்படித்தான் டைட்டில் வைப்பது என விஜய் ரசிகர்கள் செம காண்டில் திரிகிறார்களாம்.