நம்ம ஊர்ல தான் ஒரு படம் ஷூட்டிங் நடந்துக்கிட்டிருக்கும்போதே அது என்னோட கதைன்னு இன்னொருத்தன் கேசு போடறான்.. அப்படி இருக்க சத்தமே இல்லாம படத்தை ரிலீஸ் பண்ணிட்டு போறதை விட்டுட்டு இந்த விஜய் ஆண்டனி ‘வேலியில போற ஓணானை எடுத்து…. விட்ட கதையா” தேவையில்லாம வம்பை விலைகொடுத்து வாங்கியிருக்காரு..
சமீபத்துல நடந்த ‘சைத்தான்‘ படத்தோட ஆடியோ ரிலீஸ் பங்ஷன்ல அந்தப்படத்தோட ஐந்து நிமிட காட்சிகளை திரையிட்டு காட்டினார் விஜய் ஆண்டனி.. வந்தது வினை.. அதைப்பார்த்த பலரும் ‘சைத்தான்’ படத்தின் கதை, எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ….’ என்ற த்ரில்லர் நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அதுமட்டுமல்ல ‘ஆ’ கதையை சுட்டு சைத்தான் படத்தை எடுத்திருப்பதாக, விமர்சனங்களும் குற்றச்சாட்டும் இப்படத்தின் மீது எழுந்தன. இதனைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் சுஜாதாவின் குடும்பத்தினரிடம் கதைக்கு ஒரு தொகையை வழங்கிவிட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘சைத்தான்’ படத்தின் புதிய போஸ்டரில் சுஜாதாவின் பெயரையும் இடம்பெறச் செய்துள்ளனர்.