‘இது என்ன மாயம்’, ‘சைவம்’ ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பறந்து செல்ல வா’. முழுக்க முழுக்க காதல், அதை சுற்றி வரும் காமெடி என பயணிக்கும் திரைக்கதை இது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி என நகைச்சுவை பட்டாளமும் இதில் உண்டு.. ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் ஜோஷுவா ஸ்ரீதர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனபால் பத்மநாபன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்..
சென்னை ஏர்போர்ட் தவிர படத்தில் வரும் அனைத்து காட்சிகளையும் சிங்கப்பூரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. லுத்ஃபுதீன் இந்தப்படத்தின் மூலம் முழுமையான கதாநாயகனாக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.. அருமைச்சந்திரன் என்பவர் தயாரித்துள்ள இந்தப்படத்தை வரும் டிச-9ஆம் தேதி கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்தப்படத்தை பார்த்ததுமே, இதை தனது பேனரில் வெளியிடவேண்டும் என்கிற எண்ணம் கலைப்புலி தாணுவுக்கு உருவாகிவிட்டதாம். காரணம் இயக்குனர் தனபால் பத்மநாபனின் நேர்த்தியான டைரக்சன்.. அதுமட்டுமல்ல, தனது தயாரிப்பில் அடுத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பையும் தனபால் பத்மநாபனுக்கு வழங்கியுள்ளார் தாணு..
தாணு ஒரு படத்தை வெளியிடுகிறார் என்றாலே படத்தில் நிச்சயம் எதோ ரசிகர்களை கவரும் விதமாக இருக்கிறது என்றே அர்த்தம்.. அதே இயக்குனருக்கு அடுத்து, படம் இயக்கும் வாய்ப்பும் கொடுத்துள்ளார் என்றால், நிச்சயமாக ‘பறந்து செல்லா வா’ ஒரு வெற்றிப்படமாக அமையும் என இப்போதே யூகிக்க முடிகிறது.