மம்முட்டி பட டீசரை வெளியிட இயக்குனர் ராம் தயங்குவது ஏன்..!


தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பின் மம்முட்டி நடித்துவரும் படம் ‘பேரன்பு’.. ‘கற்றது தமிழ்’ ராம் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.. கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆனாலும் இந்தப்படத்தின் டீசரை வெளியிட இயக்குனர் ராம் ஆர்வம் காட்டவில்லை.. இதுபற்றி படத்தின் ஹீரோவான மம்முட்டி கூறும்போது, டீசரில் இடம்பெறும் ஒன்றிரண்டு காட்சிகள் கூட, படத்தின் கதை இது பற்றியதாக இருக்குமோ என்பதை விளக்கி விடும் என்பதால் இயக்குனர் டீசரை வெளியிட தயக்கம் காட்டுவதாக கூறியுள்ளார்.