முதல்ல இதை படிச்சுட்டு அஜித் பப்ளிசிட்டியை விரும்பாத ஆளான்னு சொல்லுங்க..

அஜித் பப்ளிசிட்டியை விரும்பமாட்டார். அதனால் தான் அவர் எந்த விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை என அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகில் உள்ள சிலரும் அவருக்கு சப்போர்ட்டாக பேசுவதுண்டு. ஆனால் உண்மையில் நடப்பது என்ன..?

விஜய்யின் பைரவா பட பாடல்கள் வெளியாகப்போகின்றன என்கிற தகவல் பல நாட்களாகவே சொல்லப்பட்டு வருகின்றன… அதற்கேற்ற மாதிரி படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகும்போது தான் பைக்கில் சாகசம் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதை பற்றியே பேச வைத்தார் அஜித்.

‘பைரவா’ பட பாடல்கள் வெளியான அதேசமயம், குல்லா அணிந்த தலையுடன் அஜித்தின் புதிய லுக் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விஜய் படத்தின் பாடல்களை பற்றிய பேச்சை அமுக்குகிறார்கள். ஏன் இதற்கெல்லாம் வேறு நாட்களே கிடைக்காதா, எங்கள் தளபதி படம் தொடர்பாக ஏதாவது ஒன்று வெளியாகும்போது மட்டும் அஜித் இந்தமாதிரி செய்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் பலரும் குமுறுகிறார்கள்.