விஜய்க்கு எதிரிகள் அஜித் ரசிகர்களோ, அல்லது அரசியல்வாதிகளோ அல்ல, அவர புகழ்ந்து பேசுகிறேன் என மேடைகளில் வகை தொகை தெரியாமல் பேசி, அவருக்கு சிக்கலை இழுத்து விடுபவர்கள் தான் அவரது முக்கிய எதிரிகள்.. இதை கவுண்டமணி ஒரு படத்தில் காமெடி காட்சியாக கூட நடித்திருப்பார்..
சரி மற்றவர்கள் தான் வாய்ஜாலம் கட்ட, விஜய்யிடம் காரியம் சாதிக்க இப்படி பேசுகிறார்கள் என்றால் சாந்த சொரூபியான, தனது வேலைகளை தவிர வேறு அனாவசிய பேச்சுக்கள் பேசாத ஏ.ஆர்.ரஹ்மான் கூட விஜய்யை முன்னிறுத்தி அரசியல் பேசியது தன செம ஷாக்கிங்காக இருக்கிறது.
சமீபத்தில் மெர்சல் விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானிடம், விஜய் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகியுள்ளது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும். அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்று பதிலளித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
நீங்களுமா ஏ.ஆர்.ரஹ்மான்..?