விஷாலை எதிர்த்து சேரன் நடத்தும் யுத்தம் வேலைக்கு ஆகுமா…?


நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஆகியவற்றில் வெற்றிவாகை சூடிய நடிகர் விஷால், இப்போது ஆர்.கே.நகர் தேர்தலில் அதிரடியாக களம் இறங்கி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேரன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

நடிகர் சங்கம் செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் பொறுப்பிலிருக்கும் நடிகர் விஷால் அரசியல் அமைப்புகளில் உள்ளோர், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் மீது அக்கறை காட்ட முடியாது என கூறியுள்ள சேரன் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும் என காட்டமாக கூறியுள்ளார்.

சேரன் இப்படி கூறுவதற்கு காரணம் என்னவாம்..?

“தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பிற்கு விஷால் வந்து 8 மாதம் ஆகிவிட்டது. ஆனால் அவர் சொன்ன ஒரு வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. தயாரிப்பாளர்கள் பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை. அரசாங்கத்தை, அமைச்சர்களை நம்பியே தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. அவர்களை பகைத்துக்கொண்டு கருத்து கூறினால், அதனால் நாளை தயாரிப்பாளர் சங்கம் முடங்கினால், திரையுலகம் முடங்கும். அவர் ராஜினமா செய்யாவிட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்”..

சேரன் சொல்வதை பார்த்தால் சினிமாக்காரர்களுக்கு முதுகெலும்பே இருக்கக்கூடாது, அரசியல்வாதிகளுக்கு கூழைக்கும்பிடு போட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறாரோ..?