விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் டைரக்சன் டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’.. இந்தப்படம் வரும் மே-11ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஹாலிவுட்டில் படம் ரிலீசாவதற்கு சில தினங்களுக்கு முன் மீடியாவை அழைத்து படத்தின் பாதியை அதாவது இடைவேளை வரை திரையிட்டு காட்டுவார்களாம்.. அதேபாணியில். இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது.
இந்தப்படத்தில் ஒரு கட்சியை பார்த்தபோது படம் பார்த்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி.. ஆம்.. சமீபத்தில் வெளியான ‘என் பெயர் சூர்யா’ படத்தில் இருந்தும் சில மாதங்களுக்கு முன் வெளியான ‘மாயவன்’ படத்திலிருந்தும் ஒவ்வொரு கட்சியை தனித்தனியாக சுட்டு, இதில் ஒரே கட்சியாக வைத்துள்ளார் இயக்குனர் மித்ரன்.
இந்த திரையிடலை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் “ இந்தப்படத்தை இப்போது இடைவேளை வரை மட்டும் திரையிடுவதற்கு காரணம் என்ன..? இதில் ஓரிரு கட்சிகள் சமீபத்தில் வெளியனா படங்களில் இடம் பிடித்திருந்ததை நீங்கள் கவனிக்கவில்லையா..? அப்படி இந்தப்படத்திற்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக திரையிட்டு இருக்கிறீர்கள் என்றால், இதுபோன்ற செய்திகள் வெளியாகி படத்தின் ரிசல்ட்டை பாதிக்காதா என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்..
ஆனால் இயக்குனர் மித்ரனோ பலவருடம் சினிமாவில் இருந்தவர் போலவும், பல படங்களை இயக்கியவர் போலவும் ரொம்பவே தெனாவெட்டாக, “எல்லாம் தெரிந்துதான் இப்போது திரையிடல் செய்துள்ளோம்.. இதெல்லாம் படத்தை பாதிக்காது” என கூறினார்.