விமர்சனம் செய்தவர்களையும் விழாவிற்கு அழைத்த ரஜினி..!


சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. ரஜினியின் அரசியல் அறிவிபுகுப்பின் நடைபெறும் அவரது சினிமா விழா என்பதால் இதில் சூடான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.. அனால் அப்படி எதயும் ரஜினி பேசவில்லை.. மாறாக தனுஷ் பேச்சின் மூலம் ரஜினியின் பெருந்தன்மை வெளிப்பட்டது..

இந்த விழாவில் இந்தப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் பேசும்போது, “ தலைவரை பார்த்து வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.. வாழ்க்கையில் பிரபலமாவதற்கு இரண்டு வழி இருக்கு. ஒண்ணு கஷ்டப்பட்டு முன்னேறி பெரிய இடத்தை அடைவது மற்றொன்று அந்த இடத்தில் இருக்கும் ஒருவரைத் தாக்கி பேசி பிரபலம் அடைவது. ஆனாலும், பழுத்த மரம்தான் கல்லடி படும் என்று பொறுமை காத்து வருகிறார் தலைவர் இதில் அவரது பொறுமையைக் கற்றுக் கொண்டேன்.

சமீபகாலமாகப் பலரும் மனது வருத்தப்படும்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்கவேண்டுமா என்று கேட்டபோது ‘எல்லாரும் நண்பர்கள்தான் எல்லாரையும் கூப்பிடுங்கள்” என பெருந்தன்மையாக கூறினார். அவரிடமிருந்து பெருந்தன்மையும், மன்னிக்கிற குணத்தையும் கத்துக்கிட்டேன்” என்றார்.