வடக்கத்தி பெண்ணாக இருந்தாலும், அப்பாடா.. நீண்ட நாளைக்கு பிறகு குடும்பப்பாங்கான ஒரு நடிகை கிடைத்துவிட்டார் என ‘கடைக்குட்டி சிங்கம்’ பட நாயகி சாயிஷாவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சமீபத்தில் ஒரு மாத அளவில் வெளியான அவரது மூன்று படங்களில் ஒன்று சூப்பர் ஹிட்டானது..இரண்டு படங்கள் சுமாரான வெற்றியை தொட்டன.
இதனால் ராசியான நடிகையாக மாறிய சாயிஷாவை தேடி வாய்ப்புகள் குவிகின்றன.. இந்த வெற்றியை கொண்டாட சமீபத்தில் திரையுலகை சேர்ந்த தனது நட்பு வட்டாரத்திற்கு பார்ட்டி வைத்தாராம் சாயிஷா. பார்ட்டியில் சரக்கு ஆறாக ஓடியதாம்..
அந்த பார்ட்டியில் கலந்துகொண்டு குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்தபோதுதான் அதிகாலையில் விக்ரம் மகன் துருவ் விபத்து ஏற்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
நல்லபெயர் தேடிவரும்போது சாயிஷா இப்படி தானே சர்ச்சைகளை உருவாக்கி சங்கடங்களை தேடிக்கொள்ளலாமா என அவரது நலம் விரும்பிகளும் ரசிகர்களும் முணுமுக்கின்றனர்.