Tamizh News

கமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..!


கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ரைசா வில்சன். ஓவியா போல ரொம்ப நேர்மையாகவும் இல்லாமல் அதேசமயம் காயத்ரி, ஜோலி போல குள்ளநரித்தனமும் பண்ணாமல் இரண்டு பக்கமும் பேலன்ஸ் செய்து பிக்பாஸ் விளையாட்டில் ரசிகர்களை கவர்ந்தார். போட்டியில் வெற்றி பெறாமல் வெளியேறினாலும் அவரை தேடி ஒன்றிரண்டு வாய்ப்புகள் வந்தன.

அதில் ஒன்றுதான் சமீபத்தில் வெளியான பியார் பிரேமா காதல் படம்.. இதில் கதாநாயகியாக ரைசா நடிக்க, அவருக்கு ஜோடியாக அதே பிக் பாஸில் பங்கெடுத்த ஹரீஷ் கல்யாண் தான் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது இந்தப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று ஒடிக்கொண்டு இருக்கிறது..

குறிப்பாக அதே தேதியில் கமலின் விஸ்வரூபம்-2 படமும் வெளியானது. ஆனால் முதல்நாளே கமல் படம் ஓப்பனிங்கில் தள்ளாட, ‘பியார் பிரேமா காதல்’ படம் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆனது. கடந்த வரும் ஆகி-25ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, சரியாக 350 நாள் கழித்து கமலுக்கு போட்டியாக களத்தில் குதித்து வெற்றிபெற்றுள்ளது ஆச்சர்யம் தான்.