சினிமாவில் இருப்பவர்களிடம் குறிப்பாக நடிகர்களிடம் குறைந்தபட்ச நியாயம் இருக்க வேண்டும் அது ஏன் நடிகர்களிடம் மட்டும் என அழுத்தி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான அக்னி தேவி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் நடிகர் பாபி சிம்ஹா.. படத்தை ஓடவிடாமல் செய்யும் வகையில் வழக்கு தொடுப்பது, படத்தைப் பற்றி எதிர்மறையாக பேட்டி கொடுப்பது எது என்னவெல்லாமோ செய்தார்.. அவர் எதிர்பார்த்தபடி படமும் பெரிய அளவில் போகவில்லை
பொதுவாக ஒரு படம் ஆரம்பித்த சில நாட்களில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என யாரோ இருவருக்கும் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம் தான். இதில் இயக்குனர் தான் பிரச்சனை என்றால் அவரை மாற்றிவிட்டு வேறு நபரை போட்டுவிட்டு படத்தை எடுக்கலாம். அதேபோல மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் என் தயாரிப்பாளரும் கூட பிரச்சனை என்றால் வேறு ஒருவரை மாற்றி மீதி படத்தை முடிக்கலாம். ஆனால் அந்த படத்தின் ஹீரோ பிரச்சினை செய்து படத்தை விட்டு விலகினார் என்றால் மீதி படத்தை எப்படி எடுக்க முடியும்..?
அப்படி என்றால் அந்த படத்தை எப்படி விற்க முடியும்..? மற்ற எந்த பொருட்களை தயாரித்தாலும் எந்த வியாபாரத்தை ஆரம்பித்தாலும் அதை பாதியிலே வேண்டாம் என்று நினைத்துவிட்டால் ஓரளவு சேதத்துடன் போட்ட முதலீடு முக்கால்வாசி திரும்ப கிடைக்கும். சினிமாவில் மட்டும் தான் எடுத்து முடித்து ரிலீஸ் செய்தாலே போட்ட பணம் திரும்ப வருமா என்று தெரியாத நிலையில், பாதி படத்தில் நடித்து விலகிவிட்டு எனக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை.. எனக்கு சேர வேண்டிய திருப்பித் திருப்பிக் கொடுங்கள் என கேட்பதை பார்க்கும்போது பாபி சிம்ஹாவிற்கு தான் எப்படி இந்த சினிமாவுக்குள் வந்தோம் என்பது மறந்து விட்டது போலத்தான் தெரிகிறது.
சரி அதையாவது விடுங்கள்.. அந்த இயக்குனர் எப்படியோ ஒருவழியாக கிராபிக்ஸ் மற்றும் சில வேலைகளை செய்து, அந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்து விட்டார்.. ஆனால் அதையும் கெடுத்து குட்டிச் சுவராக்கும் விதமாக அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்று பாபி சிம்ஹா கூறியதை பார்க்கும்போது இவர் மனிதனே அல்ல, வேற்று கிரகத்தை சேர்ந்த ஒரு நபராக இருப்பாரோ என்கிற சந்தேகம் தான் ஏற்படுகிறது.. சினிமாவில் தனக்கான எதிர்காலத்தை தன் வாயாலேயே இருண்ட காலமாக மாற்றிக் கொண்ட அதிசய நபர் இவர் தான் என்று சொல்ல வேண்டும்.