அதர்வாவுக்கு தேவை ஒரு அவசர வெற்றி


சமீபத்தில் அதர்வா நடித்த பூமராங் படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் அதை ஈடுகட்ட தவறியதால் வெற்றி பெற முடியாமல் போனது. தொடர்ந்து சராசரி படங்களையே கொடுத்துவரும் அதர்வாவுக்கு தற்போது ஒரு மிகப் பெரிய வெற்றி ஒன்று தேவைப்படுகிறது இந்த சூழ்நிலையில் அந்த வெற்றியை கொடுக்கும் படமாக அவர் நடித்துள்ள 100 என்கிற படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார் ஹன்சிகாவுக்கும் இந்த படத்தின் வெற்றி முக்கியமான ஒன்று தான்.. டார்லிங் பட புகழ் சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார் சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். சத்யா என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அதர்வா. நூறு என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதாலேயே அதை படத் தலைப்பாக வைத்துள்ளார்களாம்