சூர்யா, விஜய் இந்த இருவர் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை சுமத்தி வீடியோ வெளியிட்டு வந்தார் பிக்பாஸ் புகழ் ‘சூப்பர் மாடல்’ மீரா மிதுன். இதனால் சூர்யா, விஜய் ரசிகர்கள் அவரை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர். ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா, மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரை மீது அவதூறான வார்த்தைகளில் விமர்சித்தார் மீரா மிதுன். இதனால் ரசிகர்கள் தன்னை திட்டுவதை நிறுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்த்தார் மீரா மிதுன்.
ஆனால் நாளுக்கு நாள் அவர்மீது ரசிகர்களின் அர்ச்சனை அதிகமாகவே, ஒருகட்டத்தில் தான் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்தார். ஆனாலும் செய்யவில்லை. இந்நிலையில் எதிர்பாராத விதமாக பல்டி அடித்த மீரா மிதுன், விஜய், சூர்யா மற்றும் அவரது ரசிகர்களிடம் தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீராமிதுன். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நான் இதுவரை நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசியதற்கு, திருநங்கையும், அதிமுக பிரமுகருமான அப்சரா ரெட்டி தான் காரணம்.
அப்சரா ரெட்டியின் சைபர் புல்லிங்கில் சிக்கி, நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசி விட்டதாகவும், அதற்காக அவர்களிடமும், அவர்களது ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் அப்சரா ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீரா மிதுன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அவரது இந்த மன்னிப்பை கண்டுகொள்ளாத ரசிகர்கள், முன்பை விட உக்கிரமாகி, “சோறுதான் திங்குற. சொந்தமா யோசிக்கிற அறிவு இல்லையா..? யாராவது மிரட்டி பேச சொன்னா இப்படி பேசுவியா.. ஆனா நீ பேசுனதை எல்லாம் பார்த்தா, உன்னோட ஆழ்மனசுல இருந்து பேசினது நல்லாவே தெரியுது… இனியாவது ஒழுங்கா இரு” என மீண்டும் மீரா மிதுனை எச்சரித்துள்ளனர்.