விஜய்சேதுபதி இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திண்டுக்கல், மதுரை, பழனி பகுதியில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. இந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க திருமண மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து பழனி சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் படப்பிடிப்பு தளத்திறகு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முக கவசம் அணியாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதே படக்குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தியபோது அபராதம் கட்டினார்கள்.
அதுசரி, படப்பிடிப்பை பார்க்க மட்டும் தான் கூட்டம் கூடுகிறதா..? அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் வல்லாம் காசுகொடுத்து அழைத்துவரப்படும் ஆட்கள் எந்தவிதமான பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல், ஒருவரை ஒருவர் நெருக்கி அடித்துக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்களே..? இவர்கள் மட்டும் கொரோனா கண்ணிலும் படமாட்டார்கள்.. அதிகாரிகள் கண்களிலும் தென்பட மாட்டார்கள் போல.. விஜய்செதுபதிக்கு ஒரு நியாயம்.. அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயமா என கொந்தளிக்கின்றனர் விஜய் ரசிகர்கள்..