மஹா ; திரை விமர்சனம்

சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய படங்கள் தமிழ் சினிமாவில் சற்று அதிகமாகியுள்ளது. அந்த வரிசையில் ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் த்ரில்லர் படம் தான் மஹா.

ஹன்சிகா ஏர்-ஹோஸ்டஸாக இருந்தவர். காதல் கணவர் சிம்புவை இழந்து மகள் மானஸ்வியுடன் வசித்து வருகிறார். ஒரு சைக்கோ கொலைகாரன் மானஸ்வியை கடத்தி கொலை செய்கிறான். மகளை இழந்த ஹன்சிகா அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க முயல்கிறார். அதே சமயம் காவல்துறை அதிகாரியான ஸ்ரீகாந்த் கொலைகாரனை கண்டுபிடிக்க விசாரிக்கிறார். ஹன்சிகா அந்த கொலைகாரனை கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.

கணவன், குழந்தையை இழந்த சோகம் படம் நெடுக்க ஹன்சிகாவின் முகத்தில் தெரிகிறது. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஹன்சிகா. காவல்துறை அதிகாரியாக வரும் ஸ்ரீகாந்த் அந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார். சுஜித் ஷங்கர் சைக்கோ கொலைகாரனாக நம்மை மிரட்டுகிறார்.

சிம்பு நட்புக்காக இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவரது கதாப்பாத்திம் சற்று நேரம் அதிகம் இருந்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் வருத்தப்படுவார்கள்.

பெண் குழந்தைகளை கடத்தில் கொலை செய்யும் சைக்கோ கதையை அழகான த்ரில்லர் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜமீல்.

ஜிப்ரானின் இசையும், மதியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

தம்பி ராமையா, கருணாகரன், சனம் ஷெட்டி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.