வசூலில் குறையாத வேகத்துடன் வீரநடை போடும் ‘கபாலி’..!


சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘கபளை’ உற்சவம் இன்னும் குறையாமல் அதே தீவிரத்துடன் தான் இருக்கிறது. தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, “கடவுளின் அருளால் இந்தியளவில் மட்டுமன்றி உலகளவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ‘கபாலி’யின் வசூல் நிலவரம் பிரமிப்பூட்டுவதாகவே உள்ளது. வட அமெரிக்காவில் வெளியான இரண்டே நாட்களில் 3.5 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.23.5 கோடி) வசூலித்துள்ளது. கபாலி’ படத்தை அமெரிக்கா மற்றும் கனடாவில், ‘சினிகேலக்ஸி இன்க்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் கூறும்போது, ”3.5 மில்லியன் டாலர்கள் வசூலோடு ‘கபாலி’ அதிக வருமானம் ஈட்டிய தமிழ்ப் படமாகவும், அந்த பட்டியலில் ‘பாகுபலி’க்கு அடுத்த இரண்டாவது தென்னிந்தியப் படமாகவும் இருக்கிறது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், வசூல் அனைத்து அரங்குகளிலும் அதிகமாகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவை பொறுத்தவரை இரண்டே நாட்களில் 7.5 கோடி ரூபாய் வசூலித்து இதுநாள் வரை கேரளாவில் அந்த ஊர் படங்களும் நம்ம ஊர் படங்களும் செய்திருந்த சாதனைகளை எல்லாம் கபாலி முறியடித்துள்ளது.

இந்தியா முழுவதும் கபாலி 22 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை வசூல் விவரம்

தமிழ்நாடு-ரூ.47 கோடி
ஆந்திரா-தெலுங்கானா-ரூ27 கோடி
கர்நாடகா-ரூ.20 கோடி
கேரளா-ரூ.10.5 கோடி
இந்தியாவின் மற்ற பகுதிகள்- ரூ.23.5 கோடி

என இந்தியாவிலேயே மொத்தம் ரூ.128 கோடி வசூல் செய்து உள்ளது.

இந்தியாவுக்கு வெளியே கபாலி ரூ.87 கோடி வசூல் செய்து உள்ளது

அமெரிக்கா – கனடா- ரூ.27 கோடி
மலேசியா/ சிங்கப்பூர்-ரூ.28 கோடி
ஐக்கிய அரபு எமிரேடு, வளைகுடா நாடுகள்-ரூ.21 கோடி
இங்கிலாந்து,இந்தியாவின் மற்ற பகுதிகள்-ரூ.11. கோடி

என மொத்தம் ரூ.87 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

அதுமட்டுமல்ல, கடந்த 3 நாட்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த படங்கள் எது என்பதன் விவரம் வெளிவந்துள்ளது, இதில் உலக அளவில் கபாலி 6 வது இடத்தில் உள்ளது. வெளியான நான்கு நாட்களில் எந்திரன், தெறி படங்களின் வசூல் சாதனையை முறியடித்து இதுவரை மொத்தமாக\ ரூ.343 கோடி வசூலித்திருக்கிறது என்கிறது புள்ளி விபர பட்டியல்..