சர்ச்சை கதாசிரியருடன் கைகோர்த்த நயன்தாரா..!


விஜய் நடித்த ‘கத்தி’ படம் ரிலீசானபோது அந்தப்படத்தின் கதை தன்னுடையது என தொண்டை கிழிய ‘கத்திக்கத்தி’ குரல் எழுப்பிய கதாசிரியர் மீஞ்சுர் கோபியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே… அதேபோல பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ படத்தின் கதையும் தன்னுடையதுதான் என்றும் இந்த இரண்டு இயக்குனர்களும் தனது கதையை சுருட்டி தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்றும் குரல் கொடுத்தவர் தான் இந்த கோபி.

அந்தவகையில் ஓரளவு பலருக்கும் தெரிந்த முகமாக மாறிய கோபிக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து கிடைத்த சஸ்பென்ஸ் ஜாக்பாட் தான் நயன்தாராவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு. இவர் எழுதிய கதை ஒன்றில் நயன்தாராவுக்கென்றே உருவாக்கப்பட்டது போல ஒரு கலெக்டர் கதாபாத்திரம் இருந்ததாம்.

இதை நயன்தாரா பண்ணினால் மட்டுமே நன்றாக இருக்கும் என அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்திருந்தாராம். இந்த விஷயம் ஒருநாள் நயன்தாரா காதுக்கும் போனது.. சர்ச்சை கதாசிரியர் கோபி பற்றி கேள்விப்பட்ட நயன்தாரா அவரை வரவழைத்து கதைகேட்க அவருக்கும் பிடித்துப்போனதாம்.

ஆனால் அவர் சொன்ன கதையில் ஈர்க்கப்பட்டது ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் ‘மெட்ராஸ், ‘கத்தி’ ஆகிய படங்களால் காயப்பட்டிருந்த அவருக்கு ஆதரவு அளிப்பதற்காகவே அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் நயன்தாரா. இத்தனை நாட்களாகவே சஸ்பென்சாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியே அறிவிக்கப்பட்டுள்ளது.