ராதிகா ஆப்தே நல்ல நடிகை தான். தமிழ் தவிர தெலுங்கு, மராத்தி என மற்ற மொழிகளிலும் நடித்துள்ளவர். அதனால் தான் ‘கபாலி’ படத்துக்கு இவையெல்லாம் பிளஸ் பாயிண்ட்டுகளாக இருக்கும் என நினைத்து ரஜினிக்கு ஜோடியாக்கினார் இயக்குனர் ரஞ்சித்.. அவர் கணித்ததில், ஜோடியாக்கியத்தில் ஒன்றும் தப்பில்லை.
ஆனால் ‘கபாலி’யில் கமிட்டான பின்னும் கூட ஆபாச அட்டைப்பட போஸ்களை கொடுத்து வருமானமும் சீப் பப்ளிசிட்டியும் தேடிவந்தார் ராதிகா ஆப்தே.. ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இந்தமாதிரி எல்லாம் பண்ணலாமா என அந்த சமயத்தில் அவரைப்பற்றி கண்டனங்களும் எழுந்தன. ஆனால் அவற்றை பற்றியெல்லாம் அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை.
அப்படியானால் இயக்குனர் ரஞ்சித் அவருக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கவில்லையா என்றால் இல்லை என உதட்டை பிதுக்குகிறாராம் ராதிகா ஆப்தே.. கபாலி படத்தில் தான் கமிட்டானதில் இருந்து தனது மற்ற செயல்பாடுகள் எதற்கும் படக்குழுவினர் தடையும் விதிக்கவில்லை.. எந்தவிதமான எதிர்மறை கமெண்ட்டும் சொல்லவில்லை என்கிறாராம் ராதிகா ஆப்தே.