சிவகார்த்திகேயனுக்கு(ம்) அடுத்த இடம் தான் அஜித்துக்கு ; அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


ஆலுமா டோலுமா என ஆனந்தக்கூத்தாடி வந்த அஜித் ரசிகர்கள் என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா என அலறாத குறையாக அதிர்ச்சியில் உறைந்துகிடக்கிறார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் அஜித்தின் மார்க்கெட் நிலவரம் பற்றி வெளியிட்ட செய்தி ஒன்றுதான் இதற்கு காரணம்..

விஜய்யை விட தங்கள் ‘தல’ அஜித் தான் நம்பர் ஒன் என சொல்லிவந்த அஜித் ரசிகர்கள் ஒருகட்டத்தில் வேதாளம் படம் ரிலீஸான பின் அடுத்த சூப்பர்ஸ்டார் எங்கள் தல தான் என கொக்கரித்து வருகின்றனர். கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ என நினைத்த வேளையில் இப்போது அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாகத்தான் ஐங்கரன் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அப்படி என்ன தகவல் என்கிறீர்களா..? தமிழ்ப்படங்களின் வெளிநாட்டு உரிமைக்கு அதிக விலை பெறுவதில் ரஜினி தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என லேட்டஸ்ட் நிலவரம் சொல்லியிருக்கிறார்கள். ரஜினி படங்களின் வெளிநாட்டு உரிமை 30 கோடி ரூபாயாம். அடுத்து விஜய் படங்களுக்கு 22 கோடி, சூர்யாவுக்கு 20 கோடி, என நீளும் பட்டியலில் சிவகார்த்திகேயன் படங்கள் கூட 10 கோடிக்கு விலைபோகிறதாம். இதனால் 5வது இடத்தில் இருக்கிறார் சிவா.

இனிதான் இருக்கு ஷாக்கே.. அஜித்தின் படங்களுக்கு வெறும் 8 கோடி ரூபாய் தான் வெளிநாட்டு உரிமை கிடைக்கிறதாம். இதனால் ஆறாவது இடத்தில் தான் இருக்கிறார் நம்ம ‘தல’ அஜித்.. விஜய்யுடனும் ஏன் சூப்பர்ஸ்டாருடனும் கூட போட்டிபோட்டு வந்த தங்களது தலைவனின் நிலை, இப்போ வந்த சிவகார்த்திகேயனுக்கும் அடுத்த இடத்துக்கா போகவேண்டும் என நொந்துபோய், கொஞ்சநாளைக்கு சோஷியல் மீடியா கடைப்பக்கமே வராமல் இருக்க முடிவு செய்துள்ளார்களாம் அஜித் ரசிகர்கள். வந்தால் தான் விஜய் ரசிகர்கள் வச்சு செய்வாங்களே..