கோகுலத்தில் சீதை என்கிற படத்தில் கோடீஸ்வரன் வீட்டுப்பிள்ளையான கார்த்திக் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க காசு இல்லாமல் கிரெடிட் கார்டை நீட்டி கண்டக்டரிடம் திட்டு வாங்குவார். அந்தமாதிரி நம்ம லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவும் ரயிலில் முதன்முறையாக டிக்கெட் எடுக்காமல் பயணித்த கதையை சமீபத்தில் தயாநிதி அழகிரியின் மதுரை ஜெயண்ட்ஸ் கிரிக்கெட் டீம் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறினார்.
சிம்பு, தான் சிறுவயதாக இருந்த போது, கோவையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து சொல்லாமல், கொள்ளாமல் இரயிலில் டிக்கெட் இன்றி கோவைக்கு பயணித்த கதையை கூறினார். மெத்தையிலேயே படுத்து உறங்கிய சிம்புவுக்கு அங்கே தரையில் படுத்து உறங்குவது கடினமாக இருந்ததாம்.
அப்போது உடனிருந்து நண்பர்கள் அவர்களது தலையணைகளை மெத்தையாக்கி அதில் சிம்புவை உறங்கச் செய்தனராம். அப்படியும் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத்துதான் சோகம். அதைவிட சிம்புவை காணாமல் தேடி டென்சனான அவரது அப்பா டி.ராஜேந்தர் சிம்பு வீட்டிற்கு திரும்பி வந்ததும் அடி பின்னிஎடுத்து விட்டாராம்.