வரலட்சுமி மூலம் மீண்டும் பப்ளிகுட்டி தேடும் விஷால்..!


நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக சரத்குமாருக்கும் விஷாலுக்கும் மோதல் ஏற்பட, நாளொரு செய்தியும் பொழுதொரு கிசுகிசுவுமாக எந்நேரமும் லைம்லைட்டிலேயே இருந்துவந்தார் விஷால். யொப்போது அதெல்லாம் ஓரளவு அடங்கிவிட்டது. அவரது படங்களான பாயும் புலி, கதகளி, மருது என மூன்றுமே பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை.

மேலும் சங்கத்திலும் முன்னைப்போல ராதாரவி, சரத்குமார் என சண்டைபோடும் நபர்களும் இல்லை. இதனால் தன்னைபற்றிய பரபரப்பை மீண்டும் உண்டாக்குவதற்கு விஷால் கையில் எடுத்த, ஏற்கனவே அவ்வப்போது கையில் எடுத்த ஆயுதம் தான் வரலட்சுமி.

அதாவது தனது டுவிட்டர் பக்கத்தில் வரலட்சுமியும், இவரும் ஒரு நாய்க்குட்டியை கொஞ்சியபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். கூடவே போகிறபோக்கில் “இந்த போட்டோவே சொல்லும், நாங்கள் ஏதும் சொல்ல தேவையில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆமாம். போட்டோ என்ன சொல்லும்.. ஒருவேளை இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்களோ என்றா..? நடிகர் சங்க கட்டத்தை கட்டிமுடித்து விட்டுத்தான் திருமனப்பெச்சையே எடுப்பேன் என சபதம் போட்டிருக்கிறாரே விஷால்.. அப்படியானால்..? ஆம்…. கொஞ்சநாளைக்கு விஷாலுக்கு பப்ளிக்குட்டி தேவைப்படுகிறது.. அதுதான் இப்படி என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.