‘கபாலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்கப்போகிறார் என்றுதான் செய்திகள் அடிபட்டன. காரணம் மெட்ராஸ் படத்தை தொடர்ந்து சூர்யாவிற்கு ஒரு படம் இயக்க ரஞ்சித் தயாராகி வந்த வேளையில் தான்,ரஜினியை வைத்து படம் இயக்கம் வாய்ப்பு அவரை தேடிவந்தது.. சூர்யாவும் ரஜினி படத்தை இயக்கிவிட்டு வாருங்கள் என பெருந்தன்மையாக அனுப்பி வைத்தார்.
இப்போது ‘கபாலி’ படம் ரிலீஸாகி விட்டதால், அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை தான் ரஞ்சித் இயக்குவார் என சொல்லப்பட்டது.. அதேசமயம் சூர்யா தரப்பில் இருந்து, இன்னும் தனது அடுத்த படம் பற்றிய தகவல் உறுதியாகவில்லை என்றும், அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் பா.ரஞ்சித் டைரக்சனில் மீண்டும் சூப்பர்ஸ்டார் நடிக்கிறார் என்கிற செய்தி வெளியானது. இதை ரஜினியின் மருமகன தனுஷே அறிவித்ததுதான் ஆசர்யம்.. காரணம் அந்தப்படத்தை அவர்தான் தயாரிக்கப்போகிறார்.. ஆக, ரஞ்சித் இனி ரஜினி படத்திற்குத்தானே தயாராவார்.. அப்படியானால் சூர்யா-ரஞ்சித் படம் மீண்டும் ட்ராப் தானா..? சூர்யாவுக்கு தனுஷ் செக் வைத்துவிட்டாரா..? இல்லை அவரை டீலில் விட்டது ரஞ்சித்தா..? ரஜினியா..? இன்னும் சில செய்திகளுக்காக காத்திருப்போம்.