தற்கொலை செய்துகொண்ட நபரால் சிக்கலில் லட்சுமி ராமகிருஷ்ணன்..!


ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பொறுத்தவரை அந்தநிகழ்ச்சியில் இரண்டு தரப்பினர் பங்கேற்கும்போது, இருவரின் அந்தரங்க உண்மைகள் அம்பலமாவது என்பது எழுதப்படாத விதி.. தவிர இதுபற்றி கவலைப்படாதவர்கள் தான் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

ஆனாலும் நீதிபதி (!?) லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும் தீர்ப்பு யாரோ ஒருவருக்குத்தான் சாதகமாக இருக்கிறதே, தவிர மற்றவருக்கு பாதகமாகத்தான் அமைகிறது.. அந்தவகையில் இதில் லேட்டஸ்டாக கலந்துகொண்ட நாகப்பன் என்பவர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில நாட்களிலேயே மன உளைச்சல் தாளாமல் தற்கொலை செய்துகொண்டாராம்..

இதற்கு காரணமாக அவரது உறவினர்கள் குறிப்பிடுவது, சம்பந்தப்பட்ட ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாகப்பன் என்பவரை, ஜட்ஜ் பாணியில் லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்பவே அவமானப்படுத்தும் விதமாக, மனதை புண்படுத்தும் விதமாக கேள்விகளை கேட்டு நோகடித்து விட்டாராம்.

அந்த அவமானம் தாங்காமல் தான் தங்களது உறவினர் நாகப்பன் தற்கொலை செய்துகொண்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்களாம். இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் மேல் வழக்கு தொடுத்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்களாம்

இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் மட்டுமல்ல, டி.ஆர்.பி ரேட்டிங்கை மனதில் வைத்து இதுபோன்று கீழ்த்தரமான நிகழ்ச்சிகளை நடத்தும் பல தொகுப்பாளர்களும் ‘கிலி’ பிடித்துப்போய் இருக்கிறார்களாம்.