டிடி ரிட்டர்ன்ஸ் மாதிரி சந்தானம் இன்னும் ஒரு படம் கொடுக்க மாட்டாரா என ஏங்கிய ரசிகர்களுக்கு அவரது கிக் படம் மிகப்பெரிய உதை கொடுத்தது. இந்த 80ஸ் பில்டப் படமாவது அந்த காயங்களுக்கு மருந்து பூசியிருக்கிறதா..? பார்க்கலாம்.
80களில் நடக்கும் கதை. படத்தில் சந்தானம் கமலின் தீவிர ரசிகராக நடித்து இருக்கிறார் சந்தானமும் அவருடைய தங்கை சங்கீதாவும் எப்போதும் எதிரும் புதிதாக சண்டை போட்டுக்கொண்டு சவால் விட்டுக் கொண்டே இருப்பார்கள். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று இவர்களுக்குள்ளே மோதல் அதிகமாக இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் தான் சந்தானத்தின் தாத்தா இறந்து விடுகிறார். அனைவருமே சாவு வீட்டுக்கு செல்கிறார்கள்.
அப்போது உறவுக்கார பெண்ணாக ராதிகா ப்ரீத்தி வருகிறார். இவரைப் பார்த்ததுமே சந்தானத்திற்கு காதல் ஏற்படுகிறது. அப்போது இவர் தன்னுடைய தங்கையிடம் சாவு வீட்டின் காரியங்கள் முடிவதற்குள்ளே நான் ராதிகாவிடம் ப்ரபோஸ் செய்வேன் என்று சவால் விடுகிறார். இந்த சவாலில் சந்தானம் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை தான் காமெடி பாணியில் இயக்குனர் சொல்லி இருக்கிறார்
இதற்கிடையே சாவு வீட்டில் அந்த வைரத்தைக் கைப்பற்ற ஒரு கூட்டம், அதற்கிடையே சந்தானத்தின் காதல்,அவருடைய அப்பா ஆடுகளம் நரேனின் பொருந்தாக்காதல் என சிரிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு படம் எடுத்திருக்கிறார்கள்.
சந்தானம் இன்னும் குழப்பத்தில் தான் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அவர் ஹீரோவாக மாறிவிட்டால் அடிகடி சிரிக்க வைக்க கூடாது என யாராவது சொன்னார்களா என்ன ? அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்த்து வருவதே அதைத்தான்… ஆனால் சந்தானத்தின் பல காமெடிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை.
இவரை அடுத்து தங்கையாக வரும் சங்கீதாவின் கதாபாத்திரம் ஓகே. வழக்கம்போல அண்ணன்- தங்கை சண்டையை கலகலப்பாக இயக்குனர் காண்பித்திருக்கிறார். இவர்களை அடுத்து கதாநாயகியாக வரும் ராதிகா ப்ரீத்தி தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம் நாயகி குறிப்பாக பாவாடை தாவணியில் நகரத்துப்பெண். கொஞ்சம் கொஞ்சமாகக் காதலில் விழுந்து இளைஞர்களைக் கவர்கிறார்.
சந்தானத்தின் நண்பர்களாக வருபவர்கள் செய்யும் காமெடிகள் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கோபம் வரும் அளவுக்கு காமெடி பண்ணாதீர்கள் என்று பார்வையாளர்களே கொந்தளிக்கும் அளவிற்கு படத்தில் காமெடிகள் இருக்கிறது. ஆர்.சுந்தரராஜன்,ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான்,தங்கதுரை, கே.எஸ்.இரவிகுமார்,முனீஸ்காந்த், கிங்ஸ்லி, மொட்டை இராசேந்திரன்,மயில்சாமி,சேசு, சூப்பர்குட்சுப்பிரமணி என ஏராளமானோரை நடிக்க வைத்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். இவர்களில் ஆடுகளம் நரேன் ஆனந்தராஜி (எழுத்துப்பிழை அல்ல) வரும் காட்சிகள் அபத்தமெனினும் சிரிப்பு.
ஜிப்ரானின் பின்னணி இசை ஓகே, ஒளிப்பதிவு தான் படம் ஓரளவுக்கு தாக்குப் பிடித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜேக்கப்ரத்தினராஜ் ஒவ்வொரு காட்சிக்கும் கஷ்டப்பட்டிருக்கிறார். படத்தின் நீளத்தை கொஞ்சம் சுருக்கிருக்கலாம்
கமல் இரசிகர் காதலில் விழுகிறார் என்றால் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கலாமோ அத்தனையையும் கலந்து இதை காமெடி படம் என்பதை விட காதல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண். வழக்கமான தன்னுடைய காமெடி கான்செப்ட்டை பயன்படுத்தி இருந்தாலே படம் வெற்றி பெற்றிருக்கும் மொத்தத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப சுமார்