அறிமுக இயக்குநர் எஸ் எஸ் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ரேவதி, புகழ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16,1947. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ரங்கூன் திரைப்படத்திற்கு பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் செங்காடு கிராமத்தை ஆட்சி செய்து வரும் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் (ரிச்சர் ஆஸ்டன்) அங்கிருக்கும் மக்களை கொடூரமாக சித்ரவதை செய்து வேலை வாங்குகிறார். அவரது மகன் ஜஸ்டின் (ஜேசன் ஷா) அக்கிராமத்தில் பருவமடைந்த பெண்களை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவருக்கு பயந்து அவ்வூர் ஜமீன்தார் தனது மகள் இறந்துவிட்டதாக பொய் சொல்லி வீட்டில் வைத்து வளர்க்க, ஒருநாள் உண்மை வெளிச்சமாகிறது. இதைக் கண்ட ஜஸ்டின், ஜமீன்தார் மகளை அடைய நினைக்க, தனது காதலியான அந்தப் பெண்ணை பாதுகாக்க போராடுகிறார் பரமன் (கௌதம் கார்த்திக்). இறுதியில் பரமன் அந்தப் பெண்ணை காப்பாற்றினாரா? இல்லையா? கிராம மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தியை எதற்காக, யார் மறைத்தார்கள்? இதுதான் படத்தின் திரைக்கதை.
1940 களின் காலக்கட்டத்தை தன்னுடைய கலை இயக்கத்தின் மூலம் கண்முன் நிறுத்தி இருக்கிறார் கலை இயக்குநர் சந்தானம். கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் இப்படத்தை தங்கியுள்ளார்கள். குறிப்பாக புகழின் நடிப்பு அனைவருக்கும் ஆச்சர்யத்தை தருகிறது. ரேவதி ஷர்மா, ரிச்சர்ட் அஸ்டன் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் தாண்டி கிராம மக்களாக வரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்களின் நடிப்பிலும் அவ்வளவு உண்மைத்தன்மையை உணரமுடிகிறது. அறிமுக இயக்குநர் பொன்குமார் 1940 களில் நடக்கும் கதையை நம்பும்படியாக திரையில் காண்பித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதையை சொல்ல பயன்படுத்திய அனிமேஷன் உத்தி சிறப்புஅந்த காலகட்டத்திற்கு தேவையான நடிகர்களையும், கதாபாத்திரங்களில் ஒன்ற வைத்திருந்தது நன்றாக இருந்தது.
ஷான் ரோல்டனின் இசையும், செல்வகுமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
ஆக மொத்ததில் ஒரு நல்ல பிரீயாடிக் ட்ராமைவை பார்க்க வேண்டும் என்றால் 1947 படத்திற்கு செல்லலாம்.