முன்பெல்லாம் கிராமங்களில் எந்த ஒரு திருவிழா என்றாலும் கூத்து கண்டிப்பாக இருக்கும். இப்போதெல்லாம் அவற்றை அதிகம் பார்க்க முடிவதில்லை. கூத்துக் கலை மீதான ஆர்வம் அந்தக் கலைஞர்களுக்கே குறைந்து வருவது தான் இந்தப்படத்தின் மையக் கரு.
தனது தந்தையுடன் இணைந்து கோவில் விழாக்களில் நாடகம் நடத்தி வருகிறார் வைபவ். நாளுக்கு நாள் தொழில் நசிவடைய அரசியலில் பெரிய ஆளாக விரும்பி அதற்காக பணம் சம்பாரிக்க வெளிநாடு செல்ல விரும்புகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து வெளிவந்தாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
போதைப்பொருள் கடத்தல், இலங்கை பிரச்சனை, உள்ளூர் அரசியல், போலீஸ் அரசியல் என பல விஷயங்களை இந்தப் படத்தில் சேர்த்துள்ளார் இயக்குனர் அசோக் வீரப்பன்.
வைபவ், ஆந்தகுடி இளையராஜா, தமிழரசன், அனகா, ஆடுகளம் நரேன் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணனின் இசையும், தினேஷ் புரோஷோத்தமனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
ஒரு கடத்தல் ஆக்சன் படமாக, பல விஷயங்களை பேசியிருக்கிறது பபூன்.