ட்ரிக்கர் விமர்சனம்

இயக்குனர் ஷாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ட்ரிகர். இந்த படத்தில் அதர்வா, தன்யா, அருண் பாண்டியன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக அதர்வா இருக்கிறார். அவர் ஒரு கடத்தல் கும்பலை பிடிக்க செல்கிறார். அப்போது தன்னிச்சையாக செயல்பட்டதால் பணி நீக்கம் செய்யப்படுகிறார். இருந்தாலும் அண்டர் கவர் போலீசாக இருந்து காவல்துறையினர் செய்யும் தவறுகளை கண்காணிக்கும் வேலை அதர்வாவுக்கு கொடுக்கப்படுகிறது.

இன்னொரு பக்கம், வில்லன் மைக்கேல் சிறை கைதிகளையும், அடியாட்களையும் ஒன்றிணைத்து குழந்தைகளை கடத்துகிறான். எதிர்பாராத ஒரு சம்பவத்தில் ஹீரோ வில்லன் இருவருமே மோதிக் கொள்ள நேர்கிறது. இந்த பிரச்சனையின் பின்னணியில் ஹீரோ தந்தையின் கடந்த காலமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதை பிரபாகரன் கண்டுபிடிக்கிறார். இறுதியில் குழந்தைகள் கடத்தப்படுவது எப்படி? எதற்காக கடத்தப்படுகிறார்கள்? ஹீரோவின் தந்தைக்கும் இந்த கும்பலுக்கும் என்ன சம்பந்தம்? கடத்தல் கும்பலை ஹீரோ ஒலித்தாரா? என்பதை படத்தின் மீதி கதை.

பிரபாகரன் என்ற போலீஸ் கதாப்பாத்திரத்தில் கம்பீரமாக இருக்கிறார் அதரவா. ஆக்சன் ஹீரோவாக சரியாக பொருந்தியிருக்கிறார்.

அதர்வா ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன். காதல் காட்சிகளோ, டூயட் காட்சிகளோ இல்லாத காதல். குறைவான காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.

அதர்வாவின் அப்பாவாக நடித்துள்ள அருண்பாண்டியன் அல்சைமர் என்னும் நியாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜிப்ரான் தன்னுடைய பின்னணி இசையால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

அனாதை ஆசிரமம், குழந்தைக் கடத்தல் என அதுகுறித்து டீடெயில்லாக நிறைய விஷயங்களை கூறியிருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.

மொத்தத்தில் ட்ரிக்கர் ஒரு நல்ல த்ரில்லர் படம்.