மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தில் நடக்கும் கொலைகளும், குற்றங்களும் தான் கடாவர்.
அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகின்றன. அந்தப் பிணங்களை இன்வெஸ்டிகேட் செய்து போஸ்ட்மார்ட்டம் செய்யும் போலீஸ் சர்ஜனாக வருகிறார் அமலாபால்.
இந்தக் கொலைக்கும் சிறையில் இருக்கும் அருணுக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. ஆனால் சிறையில் இருப்பவனால் எப்படி கொலை செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. இது தொடர்பான விசாரணையில் போலீசுக்கு உதவுகிறார் போலீஸ் சர்ஜன் அமலாபால். இறுதியில் கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட்டானா? கொலைக்கான காரணம் என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தை அமலாபாலே தயாரித்து உள்ளார். அமலாபாலின் நடிப்பு படத்திகு கூடுதல் பலத்தை சேர்க்கிறது. இதுவரை பார்க்காத கெட்டப்பில் நடித்துள்ளார் அமலாபால்.
இதுவரை நெகடிவ் கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த ஹரிஷ் உத்தமன் இந்த படத்தில் நல்ல போலீசாக நடித்துள்ளார். சில நேரங்களில் அவரே கதாநாயகன் போன்றும் தெரிகிறார்.
அதுல்யா ரவி, வினோத் சாகர், ரித்விகா, அருண் உள்ளிட்டவர்கள் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
புலனாய்வு காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், ரஞ்சன் ராஜின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் இந்த கடாவர் ஒரு சூப்பரான த்ரில்லர் படம்.