எமோஜி ; விமர்சனம்

தொழில் நுட்பங்களின் ஆட்டத்திற்கு ஓடிக்கொண்டிருக்கும் சமகால காதல் கதை எப்படி இருக்கும்? இந்த காலத்தின் காதல் எப்படி இருக்கும் என்பது தான் எமோஜி.

ஐ.டி. இளைஞன் மகத் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ப்ரேக் அப் ஆகி விடுகிறது. அதற்கு காரணம் அவர்களுக்குள் இருந்த ஒப்பந்தம். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அவன் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான்.

அப்போது தேவிகாவை பார்க்கிறார் அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த நாயகன் மகத் அவரிடமும் காதலை வெளிப்படுத்துகிறான் பிறகு இருவருக்கும் திருமணமும் நடக்கிறது மிகவும் சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்த திருமண வாழ்க்கைக்குள் திடீரென்று இருவரும் டைவர்ஸ் செய்ய முயற்சிக்கின்றனர், இவர்கள் டைவர்ஸ் செய்ய காரணம் என்ன என்பதும் கடைசியில் இவர்கள் டைவர்ஸ் செய்தார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை.

இயக்குனர் ரங்கசாமி தற்போது உள்ள இளைஞர்களை மனதில் வைத்து இதை இயக்கியுள்ளார். இது 18+ கதைக்களம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்பாட்டம் இல்லாத நடிப்பால் மனதில் நிற்கிறார் மகத்.தேவிகா, மானசா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

படிப்பு வருமானம் சுதந்திரம் என்பதை இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படித் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தத் தொடர்.எவ்வளவு சீக்கிரம் ஆண் பெண் நட்பைக் காதலாக்கிக் கொள்வதற்கு அவசரப்படுகிறார்கள் என்பதையும் அவ்வளவு விரைவாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதையும் அழகாகக் காட்சிகளின் மூலம் காட்டியுள்ளார்கள்.