அறிமுக இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தெய்வ மச்சான்
தங்கைக்கு திருமண வயது வந்துவிட்டதால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால், திருமண நாள் அன்று மாப்பிள்ளையின் அம்மா இறந்துவிடுவதால் திருமணம் நின்று விடுகிறது. இதனால், ஊரில் உள்ளவர்கள் பலர் இவரை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் தங்கை நல்ல வரன் அமைந்து திருமண ஏற்பாடு நடக்கிறது.
அப்போது திருமணத்திற்கு முந்தைய நாள் விமலின் கனவில் உன் தங்கச்சி புருஷன் கல்யாணம் ஆகி இரண்டு நாளைக்குள் இறந்து விடுவான் என்று கனவு வருகிறது. இதை விடுவான் ஹீரோ அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இதனை அடுத்து தன்னுடைய தங்கை கணவரை விமல் காப்பாற்றுவாரா? இதனால் என்ன விபரீதம் நடக்கப்போகிறது? என்பதே படத்தின் மீதி கதை.
களவாணி, கலகலப்பு போன்று ஏற்கெனவே பல நகைச்சுவைப் படங்களில் நடித்திருக்கும் விமல், இந்தப்படத்தில் மிக எளிதாக நடித்திருக்கிறார். கனவில் வரும் வேல இராமமூர்த்தி சொல்லும் விசயங்களுக்காகப் பயப்படுவது, நனவில் நடக்கும் தடைகளை எதிர்கொள்வது உள்ளிட்ட காட்சிகளில் தன் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார் விமல்.
அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நேகா ஜா சிறப்பாக நடித்துள்ளார். விமலின் தங்கையாக நடித்திருக்கும் அனிதா சம்பத்துக்கு முக்கிய வேடம். அதை உணர்ந்து பொறுப்பாக நடித்திருக்கிறார்.பெரும்பாலான காட்சிகளில் சோகமாகவே நடிக்க வேண்டிய தேவை. அதற்கேற்ப நடித்திருக்கிறார். மச்சானாக நடித்திருக்கும் வத்சன் வீரமணிக்கு முக்கியத்துவம் அதிகம். அவரே திரைக்கதை எழுத்தாளர் என்பதால் காட்சிகளின் தன்மைகளை உணர்ந்து நடித்து சிரிக்க வைக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக குடும்ப நகைச்சுவை திரைப்படங்கள் வெளியாகாத நிலையில், அந்த ஏக்கத்தை தெய்வமச்சன் திரைப்படம் போக்கி உள்ளது. மது அருந்தினால் நமக்கு மட்டும் கேடு இல்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு என ஒரு நல்ல கருத்தை இயக்குநர் இந்த படத்தின் மூலம் கூறியிருக்கிறார்.
தெய்வமச்சான் திரைப்படத்தை தாராளமாக பார்க்கலாம்.