பெயரே வித்தியாசமாக இருக்கிறதே.. படமும் அதுபோல இருக்கிறதா.? பார்க்கலாம்.
அரசியல்வாதியின் மகன் ஒருவன் பெண்களிய எல்லாம் கடத்தி மானபங்கப்படுத்தி, தொடர் சித்திரவதை செய்து வருகிறான். IAS பயிற்சி வகுப்பிலுள்ள மாணவனை, ஒரு பெண் காவல்துறை அதிகாரி கைது செய்கிறார். ப்ளேடு பக்கிரி எனும் ரெளடியின் பெயரில் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். அந்த மாணவனை அவ்வதிகாரி ஏன் கைது செய்கிறார், அந்த மாணவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதும்; படுபாதக செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதி மகனுக்கும், அப்பெண் காவலதிகாரிக்கும், மாணவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதுமே படத்தின் கதை.
சில ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற அப்பாவி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நேசம் முரளி. பெண் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும் என்கிற அறிவுரையை மட்டும் வணங்காமல், ஐஏஎஸ் படிக்கும் சிவ நேசன் மூலம் ஆண் குழந்தைகளை இப்படி பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்கிற கருத்தையும் சேர்த்தே விதைத்திருக்கிறது இந்தப் படம்.
ஒரு ஐஏஎஸ் படிக்கும் கணவன் கதாபாத்திரத்தை வைத்து தவறு செய்தவர்களை இறுதியில் காவல் துறை தண்டிப்பதாக காட்சிப்படுத்திருப்பது பாராட்டத்தக்க திரைக்கதை. கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் என்கிற தலைப்பில் முழு படமாக பார்த்தபோது, வக்கிரமான காட்சிகள் எதுவுமே இல்லாமல் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கதற்காக வகையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
காவல்துறை நீதித்துறை ஆகியவற்றை அரசியல் செல்வாக்கினால் எப்படி அதிகார வர்க்கத்தினர் தங்கள் இஷ்டத்திற்கு வளைக்கிறார்கள் என்பதையும் தவறு செய்தவளை காப்பாற்ற சமூகத்தின் பெயரில் பாதிக்கப்பட்டது தனது சமூகப் பெண்கள் என்றாலும் அவர்களிடம் சமரசம் செய்யும் விதமாக பேசும் கொடுமையையும் காட்டிய விதத்தில் இந்த படம் பாராட்டத்தக்க ஒன்று.