மிஸ் யூ ; விமர்சனம்


நாயகன் அல்லது நாயகி நினைவுகள் மறந்து போகும் விதமான படங்கள் பல வந்துள்ளன. அப்படி மறந்துபோன ‘நினைவுகளை நாயகன் தேடும் முயற்சிதான் ‘ ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளிவந்துள்ள ‘மிஸ் யூ’ திரைப்படம்.

விபத்து மூலம் தலையில் அடிபட்டு கடைசி இரண்டு வருடங்களின் நினைவுகளை இழந்துவிடும் நாயகன் சித்தார்த், நாயகி ஆஷிகா ரங்கநாத்தை கண்டதும் காதல் கொள்கிறார். ஆஷிகா அவரது காதலை நிராகித்து விட, உடனே தன் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் ஆஷிகாவின் புகைப்படத்தை காட்டி அவரை காதலிப்பதாக சித்தார்த் சொல்கிறார். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைவதோடு, சித்தார்த் – ஆஷிகா இடையிலான பழைய உறவைப் பற்றிய உண்மையை அவரிடம் சொல்கிறார்கள். அந்த உண்மை என்ன?, சித்தார்த்தின் காதலை ஆஷிகா ஏற்றாரா? இல்லையா? என்பதை அளவான காதலோடு சொல்வதே ‘மிஸ் யூ’.

வாசுதேவனாக சித்தார்த் படத்தில் தன்னுடைய சார்மிங், டைமிங் சென்சால் ஒரு வித புத்துணர்;ச்சியோடு களத்தில் இறங்கி படம் முழுவதும் தன்னுடைய இருவித இருப்பை வேறுபடுத்தி காட்டி கொள்வதிலும் நகைச்சுவையிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஹீரோயின் ஆங்காங்கே நன்றாகவே ஸ்கொர் செய்திருக்கிறார். காட்சிகளில் அளவாகவும் நடித்து நம்மை கவர்ந்திருக்கிறார். திரைக்கதையில் இன்னும் சற்று நன்றாகவே வேலை பார்த்திருக்கலாம்.
கருணாகரன், பாலசரவணன், ‘ளொள்ளுசபா” மாறன், சஸ்திகா, பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், சரத் லோஹிதஸ்வா, ராம, அனுபமா உட்பட அனைத்து துணை நடிகர்கள் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக நடித்து கதைக்கு இலகுவான தருணங்களைச் சேர்த்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில் மெலோடி, குத்துப்பாட்டு என அனைத்து பாடல்களும் கேட்கும் விதம். பின்னணி இசையிலும் குறையில்லை. ஆனால், பாடல்கள் படம் முடிந்த பிறகு நினைவில் இருந்து நீங்கிவிடும் வகையில் இருப்பது காதல் கதைக்கு பலவீனம்.

ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பும் காதல் கதையை கமர்ஷியல் படமாக நகர்த்தி சென்றிருக்கிறது.

பிரிந்த தம்பதியினர் ஒரு விபத்திற்கு பின் சந்திக்க, நினைவை மறந்த கணவன் மீண்டும் தன் மனைவியுடன் சேரும் காதல், காமெடி, குடும்ப சென்டிமெண்ட், நட்பு கலந்து அருமையான பொழுதுபோக்கு படமாக ரசிக்கும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குனர் என்.ராஜசேகர்.