இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பொய்க்கால் குதிரை. குழந்தை கடஹ்தலை மைய்யமாக வைத்து த்ரில்லர் மற்றும் செண்டிமெண்ட் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ்.
விபத்தில் ஒரு காலையும், மனைவியையும் இழந்த பிரதேவாவுக்கு தனது 8 வயது குழந்தை தான் உலகமே. அந்த குழந்தைக்கு பிறப்பிலேயே இதய வால்வு பிரச்சனை இருப்பது தெரியவர நிலைகுலைந்து போகிறார். ஆனால் குழந்தைக்கு சிகிச்சை செய்ய பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. அதனால் தொழிலதிபரான வரலட்சுமியின் மகளை கடத்த திட்டமிடுகிறார். ஆனால் வேறு யாரோ வரலட்சுமியின் மகளை கடத்தி விடுகிறார்கள்.
வரலட்சுமியிடம் சிக்கும் பிரபுதேவா, அவரே குழந்தையை கண்டுபிடித்த தருவதாக கூறி அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். அவர் குழந்தையை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு கால் இல்லாத, மகளின் மீது அளவுகடந்த அன்பு வைக்கும் அப்பா கதாப்பாத்திரத்தில் பிரபுதேவா சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் தன் மகளுக்காக இன்னொருவரின் மகளை கடத்த திட்டமிடுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.
வரலட்சுமிக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை, பாசக்கார அம்மாவாக வருகிறார். அவரது கதாப்பாத்திரம் இன்னும் சற்று வலுவாக இருந்திருக்கலாம்.
ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார் பிரகாஷ் ராஜ். இவர்களுடன் பேபி ஆழியா, ஜெகன், ஜான் கொக்கென் ஆகியோரும் நடித்துள்ளார்கள். அவரவர் தங்களுக்கான கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இமானின் இசை படத்திற்கு பலம்.
மொத்தத்தில் பொய்க்கால் குதிரையின் ஆட்டத்தை ரசிக்கலாம்.