வடக்குப்பட்டி ராமசாமி ; விமர்சனம்


கடந்த ஆண்டு சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் தொடர்ந்து, கிக் மற்றும் 80ஸ் பில்டப் என இரண்டு படங்களில் வெற்றியை கோட்டை விட்டு சறுக்கினார். வடக்குப்பட்டி ராமசாமியாக மீண்டும் வெற்றிக்கனியை பறித்துள்ளாரா சந்தானம் > பார்க்கலாம்.

1970களில் வடக்குப்பட்டி என்னும் கிராமத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி என்ற சந்தானம் அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை தன் சொந்த இடத்தில் கட்டிய கோயில் மூலம் மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி கல்லா கட்டுகிறார். கோவில் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தன்னுடைய வசதியான வாழ்க்கையை வாழ்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் அந்த ஊருக்கு தாசில்தார் வருகிறார். அவர் ராமசாமி செய்யும் தாசில்தார் கண்டுபிடித்து மிரட்டுகிறார் மேலும், அவர் ராமசாமியின் சொத்தில் பங்கு கேட்கிறார். இறுதியில் ராமசாமி சொத்தை முழுவதும் தாசில்தாருக்கு கொடுத்தாரா? தாசித்தாரை எப்படி கையாண்டார்? ராமசாமி உண்மை முகம் மக்களுக்கு கையாண்டார்? வந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

சந்தானம் ராமசாமியாக ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்து கொள்கிறார். தன்னுடன் கூட்டணி சேர்ந்த சேசு மற்றும் மாறனுடன் சேர்ந்து நிழல்கள் ரவியை பின் தொடர்ந்து செய்யும் சில்மிஷங்கள், பணம் சம்பாதிக்க போடும் திட்டங்கள் கிராம மக்களை ஏமாற்ற நினைத்து செய்யும் காரியங்கள் என்று படம் முழுவதும் ஒன்லைன் பஞ்ச் சிரிப்பலைகளில் தெறிக்க விடுகிறார்

நாயகியாக நடித்திருக்கும் மேஹா ஆகாஷும், நாயகிக்கான அடையாளங்கள் இன்றி ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவர் சிரிக்க வைக்கவில்லை என்றாலும், அவரை வைத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்கள் செய்யும் காமெடி அல்டிமேட்.

தாசில்தார் வேடத்தில் நடித்திருக்கும் தமிழ், தனது வில்லத்தனத்தை நாகரீகமாக கையாண்டு ரசிக்க வைத்தாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னாலும் சிரிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இந்த படத்தில் அனைவரையும் விட நிழல்கள் ரவி காமெடி டிராக்கில் சிறப்பாக ஸ்கோர் செய்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். மேலும், கூல் சுரேஷ், பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோரின் காமெடி காட்சிகளும் படத்திற்கு பலம் தான் அதிலும், சேசுவின் பரதநாட்டியம் சிரிக்க தெரியாதவர்களை கூட குபீர் என்று சிரிக்க வைப்பது உறுதி.

ஒளிப்பதிவாளர் தீபக் படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து பின்னணியில் கதை நடந்தாலும், சென்னை வார்த்தைகள் மூலம் பாட்டு போட்டிருக்கும் ஷீன் ரோல்டன் கமர்ஷியல் கதைக்கான இசையை தாராளமாக கொடுத்திருக்கிறார்.

டிக்கிலோனா படம் பெற்ற வரவேற்பை அப்படியே இதிலும் தொடர்ந்து செய்து இந்தப் படத்திலும் அதே வரவேற்பை பெரும்படி ஒரு நிறைவான நகைச்சுவை படத்தைக் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தன் அந்த கடவுளை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான் என்ற ஒற்றை வரி கதையை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பான நகைச்சுவையை திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டி படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.