தொடர்ந்து அரங்கேறும் கொலைகளை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியின் பயணம் தான் இந்த விக்ராந்த் ரோனா. படத்தின் தொடக்கத்தில் ஐந்து குழந்தைகள் அமர்ந்து கதை சொல்கிறேன் என ஆரம்பிக்கிறார்கள்.
கற்பனை கதையான இதில் வரும் கிராமம் ஒன்றில் குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்த கொலைகளுக்கான காரணங்களை கண்டுபிடிக்க, அந்த ஊருக்கு புதிதாக வரும் காவல்துறை அதிகாரி விக்ராந்த் ரோனா விசாரணையில் இறங்குகிறார்.
அது பல புதிய திருப்பங்களுக்கு வழி வகுக்கிறது. இந்த கொலைகள் மனிதனால் நிகழ்கிறதா, இல்லை ஏதேனும் அமானுஷ்ய சக்தியால் நிகழ்கிறதா என்பதே இந்த படத்தின் மீதிக்கதை. டார்க் பாண்டசி படமா கன்னடத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது.
விக்ராந்த் ரோனாவா கிச்சா சுதீப், கம்பீரமான போலீசாக நம்மை மிரட்டுகிறார். ஸ்டைலாகவும், அதே சமயம் சண்டைக் காட்சிகளில் செம்ம மாஸாகவும் இருக்கிறார். நிரூப் பண்டாரி கிட்டத்தட்ட படத்தில் செகண்ட் ஹீரோ போலவே வருகிறார். அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜாக்லின் ஃபெர்னான்டஸின் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இவர்களுடன் நீதா அசோக், மதுசூதனன் ராவ், ரவிசங்கர் கௌடா என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
விஷுவல் எபெக்ட்ஷுடன் ஒரு அழகான பாண்டசி படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் அனுப் பண்டாரி.
படத்தின் முதல் பாதியை விட, இரண்டாம் பாதி விறுவிறுப்பாக ச்ல்கிறது. படம் முழுவது டார்க் மோடிலே வைத்திருக்கிறார்கள். படத்தின் கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். நேர்த்தியான கலை வடிவமைப்பு, காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.
சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உள்ளது. 3டி தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வில்லியம் டேவிட்டின் ஒளிப்பதிவு, காட்சிகளின் வெயிட்டை கூட்டுகின்றன. அஜனேஷ் லோக்நாத்தின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் இந்த விக்ராந்த் ரோனா, அனைவரும் விரும்பும் படமாக உள்ளது.