குலு குலு ; திரை விமர்சனம்

நன்பனை மீட்க செல்லும் சந்தானம் தலைமையிலான குழுவின் கதை தான் குலு குலு.

அமேசான் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு நாட்டில் வசித்த பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் சந்தானம். அந்த பழங்குடியின மக்களை சிலர் துன்புறுத்தி அழைத்துச் செல்ல அதிலிருந்து தப்பிக்கிறார் சிறு வயது சந்தானம். நாடு நாடாக சுற்றி இறுதியில் தமிழகம் வருகிறார். கூகுள் என அழைக்கப்படும் சந்தானம் யார் உதவி என்று கேட்டாலும் உடனே செய்வார். அது சில சமயங்களில் அவருக்கு பிரச்சனையையும் தருகிறது.

இந்த நிலையில் மூன்று நண்பர்கள் சந்தானத்திடம் வந்து தங்கள் நண்பனை யாரோ கடத்திவிட்டார்கள் என உதவி கேட்கிறார்கள். சந்தானத்தின் தலைமையில் காணாமல் போனவரை தேட ஆரம்பிக்கிறார்கள். இவர்களின் இந்த பயணத்தில் காணாமல் போனவரின் காதலியும் இணைகிறார். இடையில் சில கிளை கதைகளும் படத்தில் வருகின்றனர். காணாமல் போனவரை சந்தானம் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னக்குமார் டார்க் காமெடி படமாக இதை கொடுத்துள்ளார். சந்தானத்தை இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்ததற்கே ஒரு தனி தைரியம் வேண்டும்.

சந்தானம் படம் என்றாலே நகைச்சுவை படமாகத்தான் இருக்கும் என எதிபார்த்து வரும் ரசிகர்களை இந்தப்படம் திருப்திபடுத்துமா என்பது கேள்வி தான்.

இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட சந்தானத்தை பார்க்கலாம். வழக்காமான கதாப்பாத்திரமாக இல்லாமல் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரதீப் ராவத் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

பெரிய ஆழமான, அழுத்தமான கதையெல்லாம் இல்லாமல், போகிற போக்கில் நடக்கும் சம்பவங்களை கோத்து அதன் வழி சில விஷயங்களை காமெடியாக சொல்லும் விதம் படத்தை கவனிக்க வைக்கிறது.

சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் இந்த படம் நிச்சயம் அனைவரும் ரசிக்கும் படமாக அமைந்துள்ளது.