பழமொழிய சொல்லி பத்த வச்சிட்டியே குமாரு..!


சினிமா வி.ஐ.பிகள் எது சொன்னாலும் அது செய்தி தான்.. நல்லது சொன்னால் அது பரவுகிறதோ இல்லையோ சும்மா கொளுத்திப்ப்போடும் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே அனலை கிளப்புவது வாடிக்கை.. அப்படித்தான் நடிகர் சித்தார்த் சமீபத்தில் தனது தீயா வேலை செய்யணும் குமாரு’ பட பேமஸ் டயலாக்கான ‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டைல இருக்குற நாய்க்குத்தான் கிடைக்கணும்னா” என்கிற ‘பழமொழியை’ தனது ட்விட்டர் பக்கத்தில் தட்டிவிட்டுள்ளார்..

இந்த நேரத்தில் எதற்காக இந்த டயலாக்கை இவர் சொன்னார் என சில ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ள, இன்னும் சிலர் யூகங்களை வெடிகுண்டுகளாய் கொளுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சிலர் ரஜினிக்கு பத்மபூஷண் விருது கிடைத்ததி அப்படி சொல்கிறார் ஏன் கொளுத்த, இன்னொரு தரப்பினர் தனுஷிற்கு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்ததை குத்தி காட்டுகிறார் என பல்ஸ் ரெட்டை எகிற வைத்தார்கள்..

அதைவிட ‘அரண்மனை-2’ படத்தில் ஹன்சிகாவை வைபவுக்கு ஜோடியாக்கி இவருக்கு தங்கையாக்கிய விஷயத்தையும் குறிப்பிடுகிறார்கள் இன்னும் சிலர்.. போகப்போக இன்னும் யூகங்கள் வளரத்தான் செய்யும்… ஆனால் பதில் சொல்லாமல் சைலண்டா இருக்கிறார் சித்தார்த்.. இப்படி தீயா வேல செஞ்சு பத்தவச்சிட்டியே குமாரு என்கிறார்கள் நெட்டிசன்கள்..