படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார். கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். இந்தப்படத்தை இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது…விழாவில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டைரக்டர் இசக்கி கார்வண்ணனைப் பற்றி சமுத்திரக்கனி பேசும்போது, “இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வோமே அது மாதிரி தான் இந்த இயக்குனரும்.. அவருக்கு படத்து மேலே அளவுகடந்த நம்பிக்கை..
திடீரென்று ஒரு நாள் என்னிடம் வந்து சர்க்கார் பட ரிலீஸ் தேதிக்கே நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம்.. அவங்க சர்க்காரைப் பற்றி சொல்றாங்க…நாம சமூக விரோதிகளைப் பற்றி சொல்றோம். ஒரே தேதில ரிலீஸ் செய்வோம்” என்று சொன்னார்.. நான் தான், “அப்படியெல்லாம் வேணாம்.. நமக்குன்னு ஒரு தேதி வரும் அப்ப ரிலீஸ் செய்வோம்” என இயக்குனரின் ஆர்வக்கோளாறுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனுப்பி வைத்தாராம்.